திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சின்ன கோனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான வயலில் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி முத்துலட்சுமி (40), ராம் மனைவி மணிமேகலை (30), அடைக்கண் மனைவி பெரியம்மாள் (55) ஆகிய மூவரும் வயலில் நாத்து நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் மணிமேகலை என்பவரது இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் வேலை செய்து கொண்டிருந்த மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மணிமேகலைக்கு இடுப்பில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு காவல் துறையினர் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments