திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே செவந்தம்பட்டியில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்தில் பலி. மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று கார்களில் இருந்த சிறுவன் உள்பட நான்கு பேர் மணப்பாறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் சிவந்தம்பட்டி அருகே டயர் வெடித்து எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. டயர் வெடித்த கார் மூன்று முறை உருண்டதாக பொதுமக்கள் குறிப்பிட்டனர். மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒரு கார் முழுவதுமாக நசுங்கியது.
கார்களில் சிக்கி உள்ளவர்களை துவரங்குறிச்சி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து கார் கதவுகளை உடைத்து சிறு குழந்தைகளையும் காரில் சிக்கி இருந்தவர்களையும் மீட்டனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் பயணம் செய்தவர்கள் பலியானவர்கள் குறித்து விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள்
1, மங்கையர்கரசி (64)
க| பெ தங்கசாமி, நவல்பட்டு , திருச்சி.
2. பூஜா (20)
D/o ராஜா,
ராஜபாளையம்,
3. ரஞ்சனா (20)
Dlo சுரேஷ்குமார்
ராஜபாளையம்
4. பத்மா (60)
க/பெ ராமகிருஷ்ணன்
திருச்சி.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments