திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து அல்லூர் கிராமத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி அரசு பேருந்தின் பின்னால் மோதியது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அலறயடித்து கீழே இறங்கினர்.
இதில் பேருந்தின் உள்ள பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் உயிர் தப்பினர். இதுக்குறித்து ஜியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையெடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments