உலகத் திருக்குறள் மையம் திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் மற்றும் திருச்சி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் உலக நூல் உலகச் சாதனை மாநாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றத் தலைவர் முனைவர் தாமரை எழுதிய திருக்குறளும், சனாதனமும் என்னும் ஆய்வு நூல் மற்றும் மாநாட்டின் ஆய்வுக் கோவை 4 நூல்களும் வெளியிடப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் கன்னியாகுமரியில் நிறுவிய திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்சி செம்மொழி மன்றம் நடத்திய தமிழகப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர கழக செயலாளர் மற்றும் மண்டல குழு தலைவர் மதிவாணன் தமிழ் சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நடைபெற்ற திருக்குறளும் சனாதனமும் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோமியத்தின் பெருமையை நீங்கள் பேசும்போது….. இரும்பின் தொன்மையை தமிழர்களாகிய நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். காலை வேளையில் அவர்கள் மந்திரம் ஓதிக்கொண்டிருப்பார்கள். நாம் குறள் ஓதுகிறோம். அவர்கள் கோமியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழர்களாகிய நாம் இரும்பின் தொன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
388
25 January, 2025










Comments