திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
மாதிரி தேர்வில் பாட பகுதிகள் முழுவதில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும், மாதிரி தேர்வில் முதல் 5 இடங்களை பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1,500, நான்காம் பரிசாக ரூ.1,000, ஐந்தாம் பரிசாக ரூ.500 வழங்கப்படும்.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம். ஆர்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் மாதிரிதேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்படும்.
குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவ தற்கும் அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments