தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாகம் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் ஆர்.சேதுராமன் ரூபாய் ஒரு கோடிக்கான வரைவோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்.
அப்போது சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவெந்தர் டாக்டர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உடன் இருந்தார். சாஸ்த்ரா இம்மாதம் 8ம் தேதியன்று 6 மருத்துவ வெண்டிலேட்டர்களை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே. நகரிலுள்ள ESIC மருத்துவமனைக்கும் வழங்கியது.
ஆக்ஸிஜன் கான்சென்ட்டிரேட்டர்கள், புளோ மீட்டர்கள் அடங்கிய இந்த மருத்துவ உபகரணங்களின் மதிப்ப சுமார் 55 லட்ச ரூபாய் ஆகும். மேலும் 25 ஆக்ஸிஜன் கான்சென்ட்டிரேட்டர்கள் வாங்கி தமிழக அரசுக்கு வழங்க சாஸ்த்ரா நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments