இந்து மதத்தில் கிரகண காலம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கோயில்களில் கிரகண காலத்தில் நடை சாத்தப்பட்டாலும், விதிவிலக்காக திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் மற்றும் காளஹஸ்தி போன்ற இடங்களில் உள்ள சிவன் கோயில்கள் கிரகண காலத்திலும் திறந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.
கிரகண காலத்தில் முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய கிரகணங்கள் பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணம் என நிகழும். அதில், சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணம் அமாவாசை தினத்திலும் ஏற்படுகின்றன.
அவ்வகையில், சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். சந்திரனும், சூரியனும், பூமியின் நேர் எதிராக இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமியின் நிழலில் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும்போது, அந்த பகுதியில் சந்திர கிரகணம் எற்படுகிகிறது. இதையடுத்து, இன்று ஏற்படுகின்ற பகுதி சந்திரகிரகணம் எனப்படுகிறது.
இந்திய நேரப்படி அக்டோபர் 28ம் தேதி இரவு 11:31 மணிக்கு தொடங்கி, 29ம் தேதி அதிகாலை 3:36 மணிக்கு முடிவடைகின்றது. இந்த கிரகணத்தின் உச்சகட்டம் அக்டோபர் 29ம் தேதி நள்ளிரவு 1:44 மணிக்கு ஏற்படுகின்றது. இந்த பகுதி சந்திர கிரகமானது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரி தென் அமெரிக்காவின் வட கிழக்கு பகுதிகளிலும், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் தெரியும்.
சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சில கட்டுப்பாடுகள் இருப்பபோல், சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. வெறும் கண்களாலேயே பார்க்கலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் ஏற்படுவது வானில் நடைபெறும் ஒர் அதிசய நிகழ்வாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி கடந்த அக்டோபர் 14ம் தேதி சூரிய கிரகணமும், தற்போது அக்டோபர் 28ம் தேதி சந்திர கிரகணமும் என ஒரே மாதத்தில் 2 கிரகணம் ஏற்படுவது அதிசயமாக கருதப்படுகின்றது.
இதேபோன்று, கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 2ம் தேகி சூரிய கிரகணமும், ஜூன் 15ம் தேதி சந்திர கிரகணமும் தோன்றியது குறிப்பிடத்தக்கது. குருஞ்சிப்பூ பூ பூப்பது போல 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் வந்திருப்பதை விஞ்ஞானிகள் அதிசயமாக கருதுகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments