திருச்சி சமயபுரம் அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் கடந்த (12.08.2023) அன்று முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே இனத்தைச் சேர்ந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் வீட்டின் உள்ளே புகுந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது. லால்குடியில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட திருச்சி விஷன் கண்டித்து நாளை திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில்
தமிழர் தேசம் கட்சியின் தலைவர் சமநீதிப் போராளி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்ட திருச்சி விசன் TRICHY VISION என்ற தனியார் வலைதள செய்தி ஊடகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி இந்த மோதல் குறித்து காவல்துறை தரப்பட்ட தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது. சாதி மோதலை உருவாக்கும் நோக்கில் திருச்சி விஷன் எந்த செய்தியும் வெளியிடவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments