Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை 23.06.2021 கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளை 23.06.2021 (புதன்) மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9.00 மணி முதல் கீழ் கண்டவாறு நடைபெறவுள்ளது. 

முகாம் நடைபெறும் இடங்கள்

1. திருவெறும்பூர் – முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளி
ஆரம்ப சுகாதார நிலையம்.

2. மணிகண்டம் – சமுதாயக்கூடம், சோமரசன்பேட்டை.

பாத்திமாநகர் – தொழுநோய் மருத்துவமனை.

3. அந்தநல்லூர் – அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குழுமணி.

4. மண்ணச்சநல்லூர் – வட்டார வள மைய கட்டிடம் (அனைவருக்கும் கல்வித்திட்டம்)

5. இலால்குடி – அரசினர் மேல்நிலைப்பள்ளி, இலால்குடி.

6. மருங்காபுரி – அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வளநாடு.

7. மணப்பாறை – அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, மணப்பாறை.

8. புள்ளம்பாடி – அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

1.புள்ளம்பாடி, 
2.அழந்தலைப்பூர்,
3.பெருவளப்பூர், 
4.காணக்கிளியநல்லூர்,
5.ஒரத்தூர்,
6.மேலரசூர், 
7.கல்லக்குடி

9. வையம்பட்டி – ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளி வைரம்பட்டி.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அனியாப்பூர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீரனூர்.

10. முசிறி – அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முசிறி.

11. தாத்தையங்கார் பேட்டை – அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தும்பலம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுபாளையம்.

12. துறையூர் – செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி துறையூர்

13. தொட்டியம்

1.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காட்டுப்புத்தூர்.

2.அரசினர் மேல்நிலைப்பள்ளி, மணமேடு.

14. உப்பிலியபுரம் – அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உப்பிலியபுரம்.

 

    இம்முகாமில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்  கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும். கோவிட்-19 தடுப்பூசி செலுத்திட விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முககவசம் அணிந்து வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *