Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அருகே சுற்றுலாவுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து – 21 பேர் காயம்!!

Advertisement

திருச்சி மாவட்டம் முசிறி அருகே  குணசீலம் என்ற இடத்தில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தளத்திற்கு பக்தர்கள் சென்ற சுற்றுலா பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில் 21 பேர் காயமடைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக 41 பக்தர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளனர். பேருந்து திருச்சி நாமக்கல் சாலையில் குணசீலம் அருகே வந்தபோது சாலையின் இடது புறம் இருந்த வாய்க்காலில் பேருந்து பாய்ந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்து வந்த 21 பேர் காயம் அடைந்தனர். இதில் 11 பேர் முசிறி அரசு மருத்துவமனையிலும், 10 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

Advertisement

முசிறி அரசு மருத்துவமனையில்  ஜெயலட்சுமி, சந்திரன், ஜெகதீஷ் ,ராம தேவி, லட்சுமி, முத்துராம் ,ஆறுமுகன், சந்தியா ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *