புளியஞ்சோலை சுற்றுலா பயணிகள் உடைமாற்ற இடம் இன்றி தவிப்பு சுற்றுலாத்துறை மூலம் 8 லட்சம் மதிப்பில் உடைமாற்று கட்டிடம் இருந்தும் பயன்பாட்டிற்கு வராத நிலை. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளமாகும். இங்குதிருச்சி, தஞ்சாவூர் சேலம், புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கொல்லிமலை பகுதியில் உற்பத்தியாகும் அருவியில் இருந்து வரும் மூலிகை நீரில் நீராடுவதற்காக சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலைக்கு படையெடுத்து வருகின்றனர் தற்போது கோடை காலம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் . சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது..

இந்த நிலையில் 2019 -20 ஆம் ஆண்டில் 8 லட்சம் மதிப்பிலான உடைமாற்றம் கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை அது திறக்கப்படாமல் உள்ளதுகோடை வெயிலுக்கு இதமாக புளியஞ்சோலை நீரில் சுற்றுலா பயணிகள் நீராடிய பின்பு உடை மாற்றுவதற்காககுறிப்பாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உடைமாற்ற சிரமம் படுவதாக கோரிக்கை எழந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுற்றுலாப் பயணிகளின் நலனக் கருதி உடை மாற்றும் அறையை பயன்பாட்டிற்கு வழங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
388
04 May, 2025







Comments