Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நாளை முதல் காந்தி சந்தை எங்கே செயல்படும் வியாபாரிகள் குழப்பம் -பொதுமக்கள் அவதி காய்கறி விலைகள் ஏற்றம்

திருச்சி மாவட்ட மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய பதிலால் காந்தி மார்க்கெட்டில் ஒரே நாளில் காய்கறி விலை வாசி மூன்று மடங்கு விலை ஏற்றம் என காந்தி சந்தை மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் தமிழக மக்களை பெருந் தொற்றிருந்து  காக்கும் வகையில் 10. 5.21 நாளை முதல் 24.5.2021 வரை முழு ஊரடங்கு அறிவித்தார் .

ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சனி ஞாயிறு இரண்டு நாள் முழுவதும் கடைகள் செயல்படும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வழிவகை செய்தார் .

 கோவிட்.19. 2020 சென்ற வருடம் போல் அதிரடி உத்தரவினால் மக்களை அவதிக்குள் ஆக்காமல்  இந்த இரண்டு நாள் கடை உண்டு என்ற அறிவிப்பால் பொது மக்கள் பயனடைவார்கள் அவரவர்கள்  தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நல்ல எண்ணத்தோடு அறிவிப்பு வந்தது. இந்த இரண்டு நாட்கள் காந்தி மார்க்கெட் காய்கறி கடைகள் செயல்படுத்துவதற்கு என்ன என்ன  விதிமுறைகள் இன்று விசாரிக்க திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலர்கள் ..உதவி வருவாய் அலுவலர் (ARO )சிவசங்கர் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் (AC) கமலக்கண்ணன் அவர்களையும் அலைபேசியில் அழைத்தபோது அவர்கள் அலைபேசியின் தொடர்பை துண்டித்தார்.

இந்நிலையில் நாளை (ஞாயிறு) காந்தி மார்க்கெட் நுழைவாயில்கள் திறக்கப்படுமா?என மொத்த வியாபாரிகள் என்னிடம் கேட்கிறார்கள்..

  மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அரசின் சட்டம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப் படுத்துங்கள் என்று தெரிவித்தார்.

கால தாமதமாக இந்த தகவலை தெரிவித்ததாலும் மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் காந்தி மார்க்கெட் நாளை முதல் பூட்டப்படும் ..பொன்மலை ஜி கார்னர் மாற்றப்படும் என செய்திகள் வருவதாலும் மொத்த வியாபாரிகள் குழப்பமடைந்து காய்கனி  சரக்கு  வரவை வேண்டாமென விவசாயிகளிடமும் வெளிமாநில வியாபாரிகளிடமும் தெரிவித்ததால் இன்று காந்தி மார்க்கெட்டில் காய்கனி விலைவாசி ஒன்றுக்கு  மூன்று பங்கு விலை  உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். 

வரும் 14 நாட்களில்  ஊரடங்கு காலத்தில்  வருவாய் இல்லாத இந்த சூழ்நிலையில் தினசரி தேவைப்படும் காய்கறி விலையும் ஏற்றமா?
என புலம்பிக்கொண்டே பொதுமக்கள் காய்கறியில் வாங்கினார்கள்.வியாபாரிகளான எங்களைத் திட்டிக்கொண்டே அநியாயமாக இருக்கிறீர்கள் என பேசினார்கள்.

நேற்றைய தக்காளி விலை 7 ரூபாய்.இன்று 20 ரூபாய் 

கத்திரிக்காய் நேற்து 30 ரூபாய். இன்று 60 ரூபாய்
 
  அவரைக்காய் நேற்று 30 ரூபாய்….. இன்று 80 ரூபாய் .

மிளகாய் நேற்று 30 ரூபாய்….. இன்று 60 ரூபாய் 

கேரட் நேற்று
20 ரூபாய்…. இன்று 60 ரூபாய

மல்லிக்கட்டு நேற்று 30 ரூபாய் இன்று 60 ரூபாய் 

மாங்காய் நேற்று 20 ரூபாய்…. இன்று 40 ரூபாய் 
இதேபோல அனைத்து காய்கறிகளும் விலை இன்று உயர்ந்துள்ளது .

இந்த. காய்கனி விலைவாசி உயர்வுக்குக் காரணம்  திருச்சிமாவட்ட மாநகராட்சி அதிகாரிகளே 

வரும் ஊரடங்கு நாட்களில் வியாபாரிகளையும் பொதுமக்களையும் குழப்பாமல் காந்தி மார்க்கெட் விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் 
மேலும் தற்காலிக சந்தையான பொன்மலை ஜி கார்னர் செல்லும் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் 

சில ஆயிரங்கள் செலவு செய்து பொன்மலை ஜி கார்னர் சுத்தப்படுத்தியதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாக   கணக்கு கொடுப்பதற்காக வியாபாரிகள் அங்கு செல்ல சொல்வது முற்றிலும் முறையற்ற செயல்.

மேலும் அரசு அறிவித்தபடி காந்தி மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்து பகல் 12 மணிவரை காய்கறி வியாபாரத்தை முடித்துக் கொள்கிறோம்.

அரசின் ஆணைப்படி காய்கறி வாகனங்களுக்கு தடை இல்லை என்ற சட்டத்தை ஏற்று 
தினசரி 12 மணிக்கு பூட்டும் காந்தி மார்க்கெட்டை இரவு 9 மணிக்கு திறந்து காய்கறி வாகனங்களை உள்ளே அனுமதித்து மூட்டைகளை மட்டும் இறக்கி வைக்க அனுமதிக்க வேண்டும் ..

நாங்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வியாபாரம் செய்வோம்.சங்கம் சார்பாக வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசமும் கபசுர குடிநீரும் சானிடைசர் வழங்கிவருகிறோம்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பிரச்சனையில் 
திருச்சி அமைச்சர்கள்
  கே. என் ..நேரு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்..
ஆகியோர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வியாபாரிகளான எங்களையும் பொதுமக்களையும் வருமானம் இல்லாத   இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நிம்மதியாக வாழ வகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் M.K.கமலக்கண்ணன் கேட்டுக் கொொண்டுள்ளார். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *