சுற்றுலாத் துறையின் சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகே பாரம்பரிய நடை பயணத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்றைய இளம் தலை முறையினர் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள நாட்டின் மிகப் பெரிய அடையாளமாக திகழும் பாரம்பரிய சின்னங்கள் குறித்து தெரிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாரம்பரிய நடைப்பயணத்தில் நேஷனல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பாரம்பரிய நடைப்பயணம் மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகே தொடங்கி தெப்பக் குளம், மலைக்கோட்டை கீழ்குடைவரைக்கோயில், கார்னேஷன் பூங்கா மற்றும் அரசு அருங்காட்சியகம் வரை பாரம்பரிய நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. நடைப்பயணத்தில் திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள பல்லவர் கால குகைக்கோயில் பற்றிய வரலாற்று தொகுப்புகளையும், கார்னேஷன் பூங்கா பற்றிய வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பயிற்சியாளர் கபிலன் விளக்கி கூறினார்.
மேலும், திருச்சி அருங்காட்சியகம் பற்றிய வரலாற்றினையும் திருச்சி அருங்காட்சிய காப்பாட்சியர் எடுத்து கூறினார். இதில் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய நடைப்பயணத்தில் பல வரலாற்று செய்திகளை தெரிந்துக் கொண்டதுடன் இந்த பாரம்பரிய நடைப் பயணம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன் சுற்றுலாத்துறை அலுவலர்கள், அரசு அலுவலாகள் மற்றும் கல் லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments