Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு

No image available

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல் 
அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழங்கியுள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 14.12.2021 ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாநகரில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

(13.12.2021) – 08.00 மணி முதல் (14.12.2021) – 08.00 மணி வரை கரூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் முசிறி – நெ.1 டோல்கேட் வழியாக தஞ்சாவூர் செல்ல வேண்டும். தஞ்சை, புதுக்கோட்டையிலிருந்து கரூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் சஞ்சீவி நகர் – நெ.1 டோல்கேட் – முசிறி வழியாக கரூர் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர், கடலூர், துறையூர், அரியலூர் செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் அண்ணாசிலை – ஓடத்துறை – ஓயாமாரி ரோடு NH45 – கொண்டையம்பேட்டை – நெ.1 டோல்கேட் வழியாக சென்று வர வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் நகர பேருந்துகள் தவிர மற்ற நகர பேருந்துகள் அண்ணாசிலை – ஓடத்துறை – ஓயாமாரி ரோடு NH45 கொண்டையம் பேட்டை – நெ.1 டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையம் வரும் நகர பேருந்துகள் T.V கோவில் – மாம்பழசாலை வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலை – T.V கோவில் – காந்திரோடு- JAC கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் சென்று பக்தர்களை இறக்கிவிட்டு அம்மா மண்டபம் ரோடு மாம்பழசாலை – காவேரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரும் பேருந்து மற்றும் வேன்கள் NH 45 – CP 6 – கொள்ளிடகரை – பஞ்சகரையில் அமைந்துள்ள யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். மற்றும் 
நெல்சன் ரோட்டில் அமைந்துள்ள சங்கர் தோப்பு (சிங்கபெருமாள் கோவில்) உள்ள 
வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் பஞ்சகரை வழியாக வரும் அனைத்து 
இருசக்கர வாகனங்களும் மேலூர் நெடுந்தெரு மந்தை, மேலவாசல் வழியாக 
தெப்பகுளம் சுற்றி வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவானைகோவில், நெல்சன் ரோடு வழியாக ஸ்ரீமத் ஆண்டவர் கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். எனவே ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் பேருந்துகளை மேற்கண்ட இடங்களில் நிறுத்தி பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை மூலம் அன்புடன் 
கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்டரீதியான 
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *