திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பத்மா பழமுதிர் சோலை அமைந்துள்ளது. இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காரில் அல்லது இருசக்கர வாகனங்களில் வந்து தினமும் பழங்கள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் பாலக்கரை காந்தி மார்க்கெட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த சாலையை கடந்து செல்வதால் இச்சாலை எப்பொழுதும் வாகன நெரிசலை சந்திக்கும். இந்த நிலையில் பத்மா பழமுதிர்ச்சோலைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் மிகவும் போக்குவரத்து நெரிசலை அவ்வபோது ஏற்படுத்தும்.
இன்று கடைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் நேரடியாக வந்து அந்த காரின் ஓட்டுனரிடம் விசாரணை செய்தனர். அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்தியதற்கும் ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும் அவருக்கு அபராதம் விதித்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments