கேரளா மாநிலத்தில் சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 33 )இவர். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் பணியாற்றி வந்தார். இவர் தனியாக புத்தூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இவரது மனைவி குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.பின்னர் இரவு சிப்ட் முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பினார். பின்னர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் தற்கொலைக்கான காரணம் என்னவென்று அவரது நண்பர்களுக்கோ அருகில் உள்ளவர்களுக்கோ இதுவரை
தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசித்து வந்தசாப்ட்வேர் இன்ஜினியர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments