இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நாளை (24.06.2023) சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பயிர் சாகுபடியில் மானிய திட்டங்கள் பெற உதவும் உழவன் செயலி பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் உழவன் செயலியில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு அரசு துறையில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் மற்றும் உழவன் செயலி பதிவிறக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். மேலும் முன் பதிவு செய்ய 9488393849 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். முன் பதிவு அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments