Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பாக விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை பற்றிய பயிற்சி!!

நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி விவசாயிகளுக்கான “பாரம்பரிய நெல் விதை தேர்வு வயல்வெளி பயிற்சி” இந்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம், நபார்டு வங்கி, சாஸ்த்ரா பல்கலைகழகம் இணைந்து நமது நெல்லை காப்போம் இயக்கத்தினர் சார்பாக விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சுமார் 300 விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சத்யா சுமார் 20 பாரம்பரிய நெல் ரகங்களை குருவாடிப்பட்டியை சேர்ந்த பி.அன்புசெல்வன் மற்றும் வி.குணசேகரன் ஆகிய இயற்கை விவசாயிகளின் வயல்களில் பயிரிட்டு இந்த ரகங்களை குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்த ஆராய்ச்சி செய்து வருகிறார். 

Advertisement

சுமார் 300 விவசாயிகள் நன்கு வளர்ந்த பருவ நிலையில் உள்ள இந்த ரகங்களை களப் பார்வையிட்டு நல் விதை தேர்வு குறித்து செயல் விளக்கம் பெற்றனர். இந்த ரகங்களின் பயிர் வளர்ச்சி, மகசூல் மற்றும் சிறப்புத்தன்மைகளை குறித்து கே. வரதராஜன்(கிரியேட் ), பி. துரைசிங்கம் (கிரியேட் ), மரு. வ.ரகுநாதன் (கிரியேட் ), கே. பாலமுருகன் (நபார்டு), (ஒய்வு)பேரா.பி. ராமலிங்கம், குருவாடிப்பட்டி எம்.ஆர் .ரவி (திரிகடுகம் தேநீர்), எட்வர்ட் டென்னிசன் (தஞ்சை காபி ஹவுஸ்), கே.பொன்னுராமன்,ஆசிரியர் (ஒய்வு), டி.குலசேகரன் (திருவருள் பவுண்டேஷன்), மரு. மணிமாறன் ( சரஸ்வதி மஹால் ) பேராசிரியர் ஆ. சத்யா (சாஸ்த்ரா), மற்றும் பி. அன்புச்செல்வன் (இயற்கை விவசாயி)ஆகியோர் களப்பார்வை செய்தும் மற்றும் கருத்தரங்கில் எடுத்துரைத்தனர். 

ராஜராஜன் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மணிமொழியன் கலந்து கொண்டு நம்மாழ்வார் குறித்து புகழஞ்சலி செலுத்தினர். வயல்வெளி பயிற்சியை முனைவர் சத்யா, சாஸ்த்ரா பல்கலைகழகம், வேளாண் உதவி இயக்குநர் முரளி , பி.அன்புச்செல்வன், (இயற்கை விவசாயி, குருவாடிப்பட்டி) ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்‌.

இதில் பங்குபெற்ற விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து பெறும் நன்மைகளை குறித்து பயிற்சி பெற்றனர். மேலும், தாங்களும் தங்கள் நெல் வயலில் இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட முன்வந்துள்ளனர். இக்களப்பார்வை சாஸ்த்ரா பல்கலை கழகத்தின் துணைவேந்தருடைய ஆதரவில், சாஸ்த்ராவை சேர்ந்த ‘அத்திமலர் பெண்கள் குழுவினர்’ இயற்கை விவசாய இடு பொருள்களை அன்பளிப்பாக வழங்கினர், டிரோன் மூலம் இடுபொருள் தெளிக்கும் பயிற்சியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *