திருச்சியில் சொத்து தகராறில் தந்தை மீது திருநங்கை புகார்
திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி மூக்கபிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(84). இவருக்கு திருநங்கை கஜோல் மற்றும் இன்னொரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கஜோல் தனக்கு சொந்தமான சொந்தமான சொத்துக்களை தனது மூத்த சகோதரிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தந்தை கணேசன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருநங்கைக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் திருநங்கையை மானபங்கப்படுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கஜோல் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments