திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருநங்கையரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐந்து திருநங்கையர்களுக்கு இ-சேவை மையம் தொடங்குவதற்கான செயல்முறை பயிற்சிமோகன்ராஜால் வழங்கப்பட்டது. இன்னர்வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை மாவட்டம் 321 அவர்களின் நிதி உதவியால் இரண்டு பேருக்கு இ.சேவை மையம் அமைக்க தேவையான கணினி, பிரிண்டர் முதலிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் சேப் டிரஸ்ட் கஜோல், ராஷி கா, பவித்ரா, பால்பாண்டி ஆகியோரிடம் வழங்கி சுயதொழில் மூலம் வாழ்வில் உயர வாழ்த்தினார்.
இன்னர்வீல் தலைவர் காமினி நடராஜன்/ செயலர் சுதா மீனாட்சி சுந்தரம், உறுப்பினர்கள் சுபா கார்த்திகேயன், கவிதா நாகராஜன், உமா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர், அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் உடனிருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments