தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இன்று (21.08.2024) திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய 14 ஓட்டுநர்கள் மற்றும் 15 நடத்துனர்களுக்கு கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் இரா. பொன்முடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து கௌரவிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி மதிய உணவு அருந்தினார். அருகில் முதன்மை தணிக்கை அலுவலர் (கூட்டாண்மை ) சிவகுமார், பொது மேலாளர் ஆ.முத்து கிருஷ்ணன், துணை மேலாளர் ( கூட்டாண்மை வணிகம்) சுரேஸ்,
துணை மேலாளர் (வணிகம்) புகழேந்திராஜ், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜேந்திரன் மற்றும் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments