இந்தியா முழுவதும் அக்டோபர் 21 இன்றைய தேதியில் காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பணியின்போது கொல்லப்பட்ட இறந்த காவலர்களுக்கு நினைவு தினம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகர காவல் துறையை சேர்ந்த 3 ஆணையர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
66 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து பணியில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த வருடம் பணியின் போது திருச்சி மாவட்டத்தில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் தமிழக காவல்துறையில் இரண்டு நபர்கள் உட்பட தேசிய அளவில் மொத்தம் 264 நபர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments