திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த மணி. இவர் தினமும் குடித்துவிட்டு அத்தெருவில் தகராறில் ஈடுபடுவதாக தெருவை சேர்ந்த பெண்கள் அவசர அழைப்பு 100க்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அகிலா நேரடியாக சென்று மணியிடம் விசாரித்தார்.
பின்பு அப்பகுதி மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் மணி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார் என்று உதவி காவல் ஆய்வாளர் உத்தரவாதம் அளித்துள்ளார். பின்பு அப்பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து மணியிடம் அறிவுரை கூறியது மட்டுமில்லாமல் 15 பேருக்கு உணவு கொடுக்குமாறும் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். குடிபோதையில் தகராறு செய்த நபருக்கு கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அகிலா கொடுத்த நூதன தண்டனை என்பது சொல்வதை விட பரிகாரம் எனலாம்.
குடிபோதையில் தராறு செய்தவர் தவறை திருத்தி அவரை நல்வழிப் படுத்தவே இது போன்ற செயலில் அவரை ஈடுபடுத்திய தாகவும் உதவி காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments