திருச்சி திருவெறும்பூர் நியூ டவுனை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி ஆனந்தி (50). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இதற்காக திருவாரூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடிக்கடி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக குணசீலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (33) வேலை பார்த்து வந்துள்ளார். ஆனந்தி அடிக்கடி வங்கிக்குச் சென்று நகைகளை அடகு வைத்தால் பாஸ்கருக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டது .
இதனையடுத்து ஆனந்தி வங்கிக்கு சென்ற போது தான் தனியாக அடகு கடை வைத்து நடத்தி வருவதாகவும், அங்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்ததாகவும் பாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் என்னிடம் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர் விருப்பப்பட்டால் நீங்கள் எங்கள் எனது அடகுக் கடைகளும் முதலீடு செய்யலாம் வரும் லாபத்தில் பங்கு தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஆனந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரொக்கமாகவும், காசோலையாகவும் 70 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் கூறியபடி லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை.
முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆனந்தி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வங்கி நிர்வாகம் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்தது. பின்னர் அவர் தலைமறைவானார். இவரை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் திருப்பூரில் பதுங்கியிருந்த பாஸ்கரை கைது செய்து திருச்சி 1வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments