Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத,மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்கின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன அனைத்து தொழிற்சங்க சார்பில், ஒன்றிய அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து! உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்கு!!

பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு, கொரோனா என்ற சாக்குப் போக்கில் பறிக்கப்பட்ட ரயில்வே சலுகைகளைத் திரும்ப வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்திடு! பொதுவிநியோக முறையை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் உடல் நலஉரிமை அனைவருக்கும் வழங்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை, 2020ஐ ரத்து செய்ய வேண்டும் அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உழுபவருக்கே நிலம் சொந்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதியம், மாதத்திற்கு ரூ.26,000என நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனேநிறுத்து! மின்சாரம் (திருத்த) மசோதா, 2022ஐ திரும்பப் பெறு! முன்பணம் செலுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தாதே 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி கொடுத்து தின கூலி ரூபாய் 600 ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் நிறுவன தொழிற்சங்கங்களான தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, எஐடிசி உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *