திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் 75 பேர் பணிபுரிகின்றனர் . இவர்கள் ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த வாரத்தில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கோவிட் பரிசோதனை செய்துள்ளார் .அதன்பிறகு அவருக்கு தொற்று உறுதியானதைடுத்து அவர் விடுப்பில் சென்றுவிட்டார். ஆனால் இந்நிறுவனம் மற்றவர்களை வைத்து தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளது. தற்போது பத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் மட்டும் அனைவருக்கும் விடுப்பு என அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஆறு பெண்களும் 4 ஆண்களும் தற்போது கோவிட் தொற்று உறுதியாகி நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments