Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி புத்தகத் திருவிழா ரூ. 4 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

திருச்சி மாவட்ட நிர்வாகம், மத்திய கல்வி அமைச்சகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவை சார்பில் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ‌ ஐந்து ஏக்கர் பரப்பளவில் “திருச்சி புத்தக திருவிழா” என்ற பெயரில் பிரமாண்ட புத்தக கண்காட்சி நடைபெற்றது. 

இந்த புத்தக திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது 25-ந்தேதி வரை நடைபெற்றது.இந்த புத்தக திருவிழாவில் அரசு மற்றும் தனியார் அரங்குகள் என 160 அரங்குகள் அமைக்கப்பட்டது இதில் 150-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் இடம் பெறு உள்ளார்கள். இதில் ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்கப்பட்டது. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. அத்துடன் நாள்தோறும் 20 ஆயிரம் வாசகர்கள் வரை வந்து பார்த்து புத்தகம் வாங்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் புத்தக பிரியர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவுக்கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர், கழிவறை ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருச்சி ஜான் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செய்தி-மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப. ஜெயசீலன்.பங்கேற்று, மேலும் அவா் பேசியது,

புத்தகங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வல்லமை பெற்றவை.

திருச்சி மாநகரம் கொண்டுள்ள சிறப்புகளில் புத்தகத் திருவிழாவும் இடம் பிடித்துள்ளது. புத்தகங்கள் எத்தனையோ பயன்களை நமக்கு தருகின்றன. இதில் முக்கியமாக அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வல்லமை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

 ஆண்டுதோறும் இனி மாவட்டத் தலைநகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறும். கோயில்களில் ஆன்மிகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதுபோலத் தான் புத்தகத் திருவிழாக்களில் அறிவுத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்றார்.

 திருச்சி புத்தகத் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் பேசுகையில்,  

திருச்சி புத்தகத் திருவிழா குறித்த கலந்தாலோசனை நடைபெற்ற போது பல சந்தேகங்கள் ஏற்பட்டது ஆனால் இங்குள்ள வாசகர்களால் இது பிரம்மாண்ட நிகழ்வாக மாறி உள்ளது.

திருச்சியில் மிகச்சிறந்த வகையில் புத்தகத்திருவிழா நடந்துள்ளது. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான புத்தக சுவர், மோட்டார் சைக்கிள் பேரணி போன்றவை மக்களிடையே புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

பத்து நாட்கள் நடைபெற்ற திருச்சி புத்தகத் திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேலான ரூபாய் 4 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம், வான் நோக்குதல், மாணவ மாணவிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டு 25,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்

 இந்த முறை புத்தகங்கள் வாங்க இயலாத மாணவ, மாணவிகள், சேமிப்புகள் மூலம் அடுத்த புத்தகத் திருவிழாவில் ஏராளமான புத்தகங்களை வாங்கிச்செல்வா்.

புத்தகத் திருவிழாவின் தொடக்க நாளில் வெளியிடப்பட்டகவிஞர் நந்தலாலாவின் “ஊரும் வரலாறும்” புத்தகங்கள் 500 பிரதிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா், கவிஞா் நந்தலாலா, எஸ்ஆா்வி பள்ளிகளின் தலைமைசெயல் அலுவலா் க. துளசிதாசன், வாசகா் வட்டத் தலைவா் வீ.கோவிந்தசாமி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

நிகழ்வு நடைபெற உறுதுணையாக செயல்பட்ட பலருக்கும் மாவட்ட ஆட்சியா் நினைவுப்பரிசுகளை வழங்கினாா். திரைப்பட இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் தமிழோடு சோ்ந்திசைப்போம் என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமானோா் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்றனா்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *