தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…. திருச்சி மாநகர் பொன்மலை ஜீ-கார்னர் ரெயில்வே மேம்பாலம் கடந்த (11.01.2024) மதியம் 12:00 மணியளவில் சேதமடைந்தது கண்டறியப்பட்டது.
அதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு தேசிய நெடுஞ்சாலை சார்பாக வருத்தம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையும் சேர்ந்து போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி பாலத்தில் ஏற்பட்ட பழுது மிக விரைவில் சரிசெய்யப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments