இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்காக ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் 10 ரூபாய் நாணயங்கள் 25 ஆயிரம் ரூபாயுடன் வந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் கொடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும் என்று எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு சில கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயம் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். அவர் கொடுத்த பத்து ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு அதிகாரிகள் சிரமப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments