திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உதவி காவல் ஆய்வாளர் வீரமணி, தலைமை காவலர்கள் வினோத், கணேசன் ஆயுதப்படை காவலர் நெப்போலியன், ரபேல்தாஸ் மற்றும் சரவணகுமார் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைப் பகுதியில் கடந்த 11ஆம் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜேசிபி வாகனங்கள் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் மாரிமுத்து மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய பகுதியில் வாகன சோதனை நடத்திய போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜேசிபி வாகனங்கள் 4 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேற்படி மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் செயலை பாராட்டும் வகையில் அவர்களை நேரடியாக அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments