Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு வெகுமதியளித்து பாராட்டிய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்

திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்  பாலகிருஷ்ணண் அனைவரையும் பாராட்டி அவர்களுக்கு வெகுமதியளித்து
ஊக்கப்படுத்தியுள்ளார். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் துவாக்குடி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர் முத்துசாமி, காவலர் நிர்மல்குமார் ஆகியோர் இரவு நேர ரோந்தின் போது சிறப்பாக செயல்பட்டு பெல் நகரில் உள்ள மதுபானக் கடையில் நடக்கயிருந்த கொள்ளையில் ஈடுபட வந்த எதிரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ததற்காகவும்.

புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெண் காவலர்கள் ரேணுகா மற்றும் இளவரசி ஆகியோர் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்து வீரமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தமைக்காகவும் அதுமட்டுமின்றி ஆளினர்களின் சிறந்த பணியை பாராட்டி  திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வெகுமதியளித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *