திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் திருச்சியில் நடந்தது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.
மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் லட்சுமணன், ராஜேந்திரன் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்பு உழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க பாடுபடுவது,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய உழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சாவூர், புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments