திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூர் காவல் சரகம் கொல்லாங்குளம் பகுதியில் வசித்து வரும் அர்ஜுன் என்பவரின் மகள் காந்திமதி (25). மனநிலை குன்றியவர் இந்த பெண்ணை கன்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் கருணாநிதி என்பவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் அருகே
ரயில்வே மேம்பாலம் கீழே ரயில்வே கிராசிங்கில் உள்ள பாழடைந்த அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்ற சொல்லி அமர வைத்திருந்ததை அவ்வழியே சென்ற நபர் கண்டு சத்தமிட, மேற்படி தலைமை காவலர் வாகனத்தில் சென்று விட்டார்.
மேற்படி தலைமை காவலர் தற்சமயம் திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்மணி காந்திமதியின் தகப்பனார் அர்ஜுன் வாய்மொழியாக எடமலைப்பட்டிப்புதூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments