திருச்சி மாநகரத்தில் இன்று 17.09.2021 ஆம் தேதி சமூகநீதி நாள் உறுதிமொழி மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதி நாளான இன்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும்
கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக
என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்! சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காவல்துறையினரும் மற்றும் மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களும்
கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments