25.05.2025 ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணி அளவில் மதுரை பூங்கா முருகன் கோயில் திடலில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியை முடித்துக் கொண்டு சுமார் 21 பேர் கொண்ட வேனானது மன்னார்குடி நோக்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது நவல்பட்டு காவல் நிலைய எல்லை ரிங் ரோடு பரணி
கார்டன் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் மாத்தூர் நோக்கி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்த கார் வேனின் பக்கவாட்டில் நடுப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து நடந்தபின் பார்த்தபோது காரில் வந்தவர் திருச்சி மாநகர நீதிமன்ற காவல் நிலைய போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணிந்துபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. திருக்குமரன் என்று தெரிய வந்தது.
மேற்படி விபத்தின் போது காரில் வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வேனில் வந்தவர்களுக்கு லேசான காயங்களுடன் இருந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் பெற்ற போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறந்தவர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments