இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த (21.06.2021)முதல் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த 24 மணிநேர சேவை பெண்கள் ஹெல்ப் டெஸ்க் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்று (26.06.2021) 15 காவல் நிலையங்களில் இந்த உதவி மையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உதவி மையத்திற்கும் 2 பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் 181 வரும் அழைப்புகளுக்கு உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் ஹெல்ப் டெஸ்க் சேவையை இன்று திருச்சி மாவட்டத்தில் தொடங்கி வைத்து பேசிய திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ராதிகா இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்களோடு உரையாடுகையில், உதவி என்று கேட்டு உங்களுக்கு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பையும் உங்களுடைய பிரச்சனையாக கருதினால் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான 100 வகையான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
எனவே ஒவ்வொரு பிரச்சினைகளோடு வரக்கூடிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனையை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றிற்கு முழுமையான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இயக்கத்தின் நோக்கம் என்று கூறினார்.
24 மணி நேரமும்பெண்கள் உதவி டெஸ்க் சேவையானது செயல்படும் என்பதால் இந்த உதவி மையத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு லேப்டாப் மற்றும் இருசக்கர வாகனங்களை அரசு வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற துவக்க விழாவில் திருச்சி சரக டிஐஜி ராதிகா பெண் காவலர்களுக்கான லேப்டாப் மற்றும் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments