திருச்சி மாநகர பகுதிகளில் தற்பொழுது கோவிட் தொற்று சிறிது அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது .இந்நிலையில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் கோவிட் தொற்று கட்டுப்படுத்துவதற்கான விதி முறைகளை பின்பற்றுகிறார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளான (ஜெனட் மருத்துவமனை
ரூ 10000
தீபன் நர்சிங் ஹோம்
ரூ 5000 ஏஜி கண் மருத்துவமனைக்கு ரூபாய் 3000 )அபராதம் விதித்தனர்.
கோவிட் தொற்று கட்டுப்படுத்தல் விதி முறையை கடைபிடிக்காமல் தனிமனித இடைவெளி முக கவசம் அணியாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments