கொரோனா பரவலைக் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தடுப்பூசி அவசியமாகிறது என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட முன்பை விட தற்போது அதிக முனைப்பு காட்டிவருகின்றனர். இருந்தாலும் தடுப்பூசி பற்றாற்குறை காரணமாக திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது குறைவாகவே இருந்து வருகிறது.
இருதினங்கள் கழித்து நேற்று 8 மையங்களில் திருச்சி மாநகரில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, இன்று மீண்டும் தடுப்பூசி பற்றாற்குறை காரணமாக மாநகரில் ஒரு இடத்திலும், புறநகர் பகுதியில் இன்று 13 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
இதனிடையே திருச்சி மாநகரில் ஒரே மையத்தில் மட்டுமே தடுப்பூசி முகாமினை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்ததால் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி தடுப்பூசி போட குவிந்தனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலான பாலக்கரை சாலையில் உள்ள மதரசா முகம்மதிய நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமிற்கு மக்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இனிவரும் நாட்களில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்ய மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments