தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் சவுக்கு சங்கர் ஆர்மி என்ற பக்கத்தில் மணப்பாறை அருகே
தற்காலிக அரசு பஸ் டிரைவர் இயக்கிய பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலியாகி விட்டதாக பதிவிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அதைத் தொடர்ந்து பொய் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பப்படுவருதை அறிந்து திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments