சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது சிறுகனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி தினமணி நிருபர் கோபி (37) மற்றும் அவரது நண்பர் செந்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்த இடத்திற்கு வந்த சிறுகனுார் போலீசார் உடல்களை கைப்பற்றி விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான செய்தியாளர் கோபி நண்பரின் வேலை சம்பந்தமாக நேற்று சென்னை சென்று இன்று மதியம் திருச்சி நோக்கி வந்த கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலியான செய்தியாளர் கோபியின சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments