திருச்சி விமான நிலையத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் பயன்பெறும் இந்த திருச்சி – டெல்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவையை கொண்டு வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். விமானம் தயாராக உள்ளதாகவும், அதற்குரிய slot டெல்லி விமான நிலையத்தில் கிடைக்க காத்திருப்பதாகவும் தகவல் தந்தார்கள்.
அதனைப் பெற்றுக் கொடுக்க ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்து, அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். இந்நிலையில் இண்டிகோ நிறுவனம், திருச்சி டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.
எனது தொகுதி மக்களும், அதன் சுற்று வட்டார மாவட்ட மக்களும் பயனடையும் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் நான் என் மனமார்ந்த வரவேற்பை வழங்குவதில் உறுதியாய் இருக்கிறேன். அதன் அடிப்படையில் இண்டிகோ நிறுவனத்திற்கும், இதற்கு பாடுபட்ட, ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அத்துடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் விரைவில் திருச்சி – டெல்லி நேரடி விமான போக்குவரத்துச் சேவையை தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன். இதனால் திருச்சி மற்றும் மத்திய மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மேம்படும் என்பது உறுதி. அதற்கான எனது பணிகள் தொய்வின்றி தொடரும். என்று துரை வைகோ அவர்கள் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments