திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் சிறையில் உள்ள நூலகத்தில் அறிவுபூர்வமான புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்திடவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை நன்மையான வழியில் செயல்படுத்தவும் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பின் கீழ் சிறை வளாகத்தில் புத்தகக் தானம் சேகரிக்கும் இடம் அமைந்துள்ளது.
இதில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கிக் வருகின்றனர். சிறைவாசிகள் தாங்கள் செய்யும் குற்ற செயல்களில் இருந்து மனம் திருந்தி மறுவாழ்வு வாழ அவர்கள் புத்தகம் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்கும் வண்ணம் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், திருச்சி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் அவர்களிடம் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் சிறை மேலாளர் திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments