திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், வயலூர் முருகன் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை வளாக கோவில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வருகிற 02.08.2021 மற்றும் 03.08.2021 ஆகிய நாட்களில்
நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு முதலிய நிகழ்வுகளில் கொரோனா தொற்று காரணமாக திருக்கோவில்கள் அர்ச்சகர் மட்டும் கலந்து கொண்டு ஆகம விதிப்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்த நாட்களில் பொது தரிசனத்தில் கலந்துகொள்வது பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments