திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவாணை கோவில் செக்போஸ்ட் அருகில் கொள்ளிடம் ஆற்றில் இன்று (14.05.2023) 4 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் 1903 கன அடி தண்ணீர் முற்றிலும் இன்று காலை 11:30 மணியளவிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது கொள்ளிட கதவணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் முழ்கிய சிறுவர்கள் கிடைக்க பெறும் வரை கொள்ளிட கதவணையின் மதகுகள் முற்றிலும் அடைக்கப்படும். காவிரி ஆற்றில் வரும் தற்போதைய 1903 கன அடி நீர் வரத்தினை சுமார் 8 மணி நேரம் வரை மட்டுமே முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்க இயலும்.

மேலணையின் முழு கொள்ளவை எட்டியவுடன் மேலணைக்கு வரும் 1903 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும். இதற்கு இடையில் தண்ணீரில் முழ்கியவர்கள் கிடைக்க பெற்றவுடன் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
14 May, 2023










Comments