திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்படும் கிடங்குகளில் திருச்சி மாநகரில் உள்ள காவலர்கள் தேர்தல் பணி புரியும் 1672 காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திவ்யதர்ஷினி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . சித்ரா விஜயன் பயிற்சி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் மண்ணச்சநல்லூர், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு சமயபுரம் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தையும் நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments