திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்.ராஜேந்திரகுமார், மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாநில செயலாளர் கிருபா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வனஜா, மோகனா, விக்னேஷ், சுகன்யா, சிவகாமி, பெரியசாமி, முருகையா நோபல் சந்திரபோஸ் அப்துல் சலாம் சுரேஷ் ஆறுமுகம் அஸ்வின் பிரபு கோகுல் காமராஜ் பழனிச்சாமி ரமணன் அமர்த்தியா சுப்ரமணி சரவணகுமார் பிரியா அசோக்குமார் டேனியல் கார்த்திகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கூட்டணி ஆட்சி தத்துவப்படி தமிழகத்தில் நிறைவடையா இருக்கும் மாநில அரசு சார்ந்த அரசு வழக்கறிஞர் பதவிக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்ககோரி தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைப்பது.
2. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் பொருளாதார குற்றப்பிரிவு, கடனுறுதி தீர்ப்பாயம், போஸ்கோ நீதிமன்றம் ஃ(குழந்தைகளைபாதுகாக்கும் நீதிமன்றம்) போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் நீதிமன்றம்(EOW,DRT, POCSO,NDPS) ஆகிய நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
3. திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கேரள மாநிலம் வயநாடு சென்று தேர்தலில் போட்டியிடும் இளம் தலைவி பிரியங்கா காந்தி வெற்றிக்கு பாடுபடுவது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments