தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்காக திருச்சி தெற்கு மாவட்டத்தில் இருந்து ஆறு பேர் ஒரு காரில் விக்கிரவாண்டி வி.சாலைக்கு சென்றனர்.
அப்பொழுது இவர்களது கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக்உசேன் பேட்டை வந்தபோது சாலையின் தடுப்பு கட்டையில் மோதி நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கலை இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் ஏற்பட்ட மூன்று பேர் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments