தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ்வரன் மறைவிற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தி.
தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தில் திருச்சி மாவட்டத்தில் ஒளிப்பதிவாளராகப் (Cameraman) பணியாற்றி வந்த டி.விக்னேஷ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (30.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
ஊடகத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய திரு.விக்னேஷ்வரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். தமிழன் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, மறைந்த ஒளிப்பதிவாளர் விக்னேஷ்வரன் குடும்பத்திற்கு பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலம் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments