திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய்க்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததாலும், தொடர்ந்து பேசிய அவர் அவ்வப்போது பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் குழாய்களின் சுற்றளவை அதிகரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி பேசிய போது… மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் அமாவாசை விரதம் முடிக்க வேண்டும் பேசியது போதும் என கூச்சலிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த 60வது வார்டு திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மாமன்ற கூட்டத்தினை புறக்கணித்து வேகமாக கூட்டரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் மாநகராட்சி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
திமுக மாமன்ற உறுப்பினர் விஜய் கடைசியாக தேவையில்லாதவற்றை பேசி அதிக நேரத்தை செலவிடுவதாக குறிப்பிட்டனர். இன்றும் இருபது நிமிடத்துக்கு மேலாக சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி விஜய் பேசியதாக மற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எப்படி இருந்தாலும் திமுக மாமன்ற உறுப்பினர்களே தனது கட்சி மாமன்ற உறுப்பினரை பேச விடாமல் செய்தது திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
Comments