Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மின் நுகர்வோர் சேவை மையம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி மின்சார துறை ஊழியர்கள்

இன்றைக்கும் பலர் மின் தடை ஏற்படும் போது குறிப்பாக மழைக்காலங்களில் மின்துறை பணியாளர்களை தொடர்பு கொள்வது சிரமமாய் இருக்கும் என்று பல குற்றச்சாட்டுகள்  இருந்த வண்ணமே இருக்கின்றது. அதனை சரிசெய்யும் வண்ணமும் மக்களுக்கு உடனடியாக உதவிட வேண்டுமென்று மின்னகம் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு சரியாக சென்று சேர்ந்து விட்டதா? மக்களுக்கு பணியாளர்கள் மூலம் உதவிகள் கிடைக்கின்றனவா? என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். 

திருச்சி பொன்நகர் சரக மின்வாரிய உதவி மின்பொறியாளர் செந்தில்குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், திடீர் மின் தடை, மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்தல், மழையால் மின் தடை போன்றவை  உடனடியாய் மக்களுக்கு உதவிட மின்னகம் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த நுகர்வோர் மையம் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். நுகர்வோரின் குறைகளைப் பெறுவதற்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 

பொதுமக்கள் அளிக்கும் புகார்களைப் பெறுதல், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்குச் சொல்வது, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படுகிறது. மின் நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் உள்ளன. இந்த புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த சேவை மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்ததா என்பதை தெரிந்துகொள்வதற்கு நேரடியாக மக்களை தொடர்பு கொள்வதே சிறந்தது என்று எங்கள் குழுவினரோடு பொன்நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து மக்கள் இதை சரியாக பயன்படுத்துகிறார்களாஎன்பதை தெரிந்துக்கொண்டோம். அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு பெற்றுள்ளதே என்பது மனநிறைவு உண்டாக்கி உள்ளது மேலும் இதன் மூலம் பல குறைகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது என்றார்.

இந்த ஆய்வு குறித்து பொன்நகர் பகுதியைச் சேர்ந்த  குடியிருப்புவாசி வெள்ளையன் பகிர்ந்து கொள்கையில்… என் வீட்டில் பத்து நாட்களுக்கு முன்பு மின்தடை ஏற்பட்டது இந்த எண்ணை தொடர்பு கொண்ட முதல் அரைமணி நேரத்திலேயே வந்து சரி செய்து விட்டனர். இந்த திட்டமானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது அதுமட்டுமின்றி ஊழியர்கள் அனைவருமே அவர்களுடைய கடமையை தவறாது  செய்யும் பொழுது  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களுடைய சேவை  தொடர வேண்டும் என நேரடியாக இவ்வாறு  வீடுகளுக்கே வந்து ஆய்வு செய்யும் மின்சார துறையின் புதியமுயற்சி மக்களுக்கு மிகுந்த பயனாய் இருக்கின்றது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *